முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு உள்துறை செயலாளர் கடிதம்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் அஜய் பல்லா எழுதியுள்ள கடிதத்தில், ஒரு சில மாநிலத்தின் சில மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று அதிகரிப்பது கவலை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பண்டிகை நாட்களில் மக்கள் கூட்டம் கூடுவதைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், கூட்டம் கூடுவதை தடுக்க சில கட்டுப் பாடுகளை விதித்துக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை மாநில அரசு மற்றும் யூனியன் அரசுகள் முறையாக பின்பற்றுவதில்லை எனக் கூறியுள்ள அஜய் பல்லா, .மீண்டும் கொரோனா பரவல் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதே முக்கியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் 3.5 லட்சத்தைக் கடந்த தினசரி கொரோனா பாதிப்பு!

Ezhilarasan

ராஜஸ்தானின் 13 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு!

Nandhakumar

இணையத்தை கலக்கும் சைக்கிள் பயணம்

Saravana Kumar