முக்கியச் செய்திகள் தமிழகம்

இனிப்பில்லாத பால்கோவா தயாரிக்கும் நவீன இயந்திரங்கள்: அமைச்சர் அறிவிப்பு

சேலத்தில் இனிப்பில்லாத பால்கோவா தயாரிக்கும் நவீன இயந்திரங்களுடன் கூடிய பிரிவு 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பால்வளத்துறை மானிய கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப்புகளை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் இன்று தாக்கல் செய்தார். அப்போது பால்வளத்துறையில் பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதன்படி, 6 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில், பால் உற்பத்தியாளர்களின் கால்நடை களுக்கு சிகிச்சை அளிக்க வசதிகள் அமைத்துக் கொடுக்கப்படும் என கூறினார்.

வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் தேவைக்காக, 88 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 குளிர்காப்பு வாகனங்கள் மற்றும் 3 குளிர்சாதன வசதிகொண்ட வேன்கள் வழங்கப்படும் என்றும், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களுக்கு, 60 லட்சம் ரூபாய் மதிப்பில் பால் கேன்களை குளிர்விக்கும் 40 இயந்திரங்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் நாசர் அறிவித்தார்.

பால் உற்பத்தியாளர்கள் நலன் கருதி தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடியில் நாளொன்றுக்கு 500 மெட்ரிக் டன் உற்பத்தி திறனில் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை, 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் என்றும் பால்வளத்துறை அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சேலம் கூட்டுறவு பால் பண்ணையில் நாளொன்றுக்கு 2 மெட்ரிக் டன் அளவில் இனிப்பில்லாத பால்கோவா தயாரிக்கும் நவீன இயந்திரங்களுடன் கூடிய பிரிவு 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியாளர்களுக்கு கால்நடை பராமரிப்பு குறித்து குரல் ஒலி மற்றும் குறுஞ்செய்தி வாயிலான இலவச சேவை அறிமுகப்படுத்தப்படும் எனக்கூறிய அமைச்சர் நாசர், தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு பாலின் தரம் மற்றும் பாலின் மதிப்பிற்கு ரசீது வழங்க 453 பால் பகுப்பாய்வு கருவிகள் 2 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கப்படும் என கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

புதுச்சேரியில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்கிறேன் : நாராயணசாமி

Ezhilarasan

பிச்சை எடுப்பதில் அதிக வருவாய் கிடைப்பதாக கூறி முகாம்களுக்கு செல்ல மறுத்த ஆதரவற்றோர்!

Gayathri Venkatesan

ஓபிசி பட்டியலில் திருநங்கைகள் – மத்திய அரசு முடிவு

Saravana Kumar