தனியே தனந்தனியே… நகராட்சியை அதிர வைத்த முதியவர்!

புதுக்கோட்டை நகராட்சியில், 7 ஆண்டுகளாக பாதாள சாக்கடை மற்றும் சாலை வசதி செய்து தராதை கண்டித்து, முதியவர் ஒருவர் பதாகை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார். புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட இருபதாவது வார்டில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள்…

புதுக்கோட்டை நகராட்சியில், 7 ஆண்டுகளாக பாதாள சாக்கடை
மற்றும் சாலை வசதி செய்து தராதை கண்டித்து, முதியவர் ஒருவர்
பதாகை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார்.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட இருபதாவது வார்டில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் , அப்பகுதியில் கடந்த ஏழு ஆண்டுகளாக பாதாள சாக்கடை வசதி , சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து
தரப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும், இது தொடர்பாக வார்டு கவுன்சிலர் மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம்
நேரில் சந்தித்து மனு கொடுத்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும், உடனடியாக அப்பகுதியில் சாலை வசதி மற்றும் பாதாள சாக்கடை உள்ளிட்ட
அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென, நகராட்சி மற்றும் அப்பகுதி வார்டு
கவுன்சிலர் கவனத்தை ஈர்க்கும் வகையில், நகராட்சி அலுவலகம் முன்பு சிங்காரவேலு
என்ற முதியவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

—கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.