26.7 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆளுநர் ரவி ஒரு சுவாரஸ்யமான நபர் – கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி என்னை பொறுத்தவரை ஒரு சுவாரஸ்யமான நபர் என்று காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது பேசிய அவர்கள் கூறியதாவது; தமிழக ஆளுநர் சமீபக காலங்களில் சுவாரஸ்யமான மனிதராக மாறி உள்ளார். அவருடைய ஒரே நோக்கம் தமிழ்நாட்டில் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிராக, தமிழக அரசுக்கு எதிராக, சில கருத்துக்களை தொடர்ச்சியாக திரும்பத் திரும்ப சொல்வது தான் அவருடைய சிந்தனை. எப்போதுமே இந்தியாவை, தமிழகத்தை பொறுத்தவரை அந்நியம் மூலதனம் கிடையாது. தோற்றம் கிடையாது. நம்மிடம் இருப்பது மனித வளம் தான். ஆசிய நாடுகளில் அப்படித்தான் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். அவ்வப்போது அவருடைய எல்லை மீறிய பேச்சுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தாலும் தொடர்ந்து அவர் பேசி வருகிறார். இப்போது அந்நிய மூலதனம் நேரடியாக போய் கேட்பதால் வராது என்ற ஒரு கருத்தை வெளியிட்டு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடுகளுக்குச் சென்று தமிழகத்தின் வளர்ச்சிக்காக அந்நிய மூல தனங்களை ஈர்த்து வந்ததை குறை கூறி இருக்கிறார். என்னைப் பொறுத்தவரை ஆளுநர் ரவி ஒரு சுவாரஸ்யமான நபர் என்று கே.எஸ் அழகிரி தெரிவித்தார்.

மேலும் மோடி வந்த பிறகுதான் நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கூறுகிறார். உண்மையில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டது. நரசிம்மராவ், மன்மோகன் சிங், சிதம்பரம் ஆகியோர் காலத்தில் தான். இப்போது தொழில் வளர்ச்சி 9 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைந்து இருக்கிறது.மோடி அரசு வளர்ச்சி பாதையில் இருந்து விலகி மதவாத அரசியலை மட்டுமே நம்பி இருக்கிறது. இப்போது மணிப்பூரில் ஒரு இன அழிப்பையே அரசாங்கம் செய்து வருகிறது. பெருவாரியான பழங்குடியின மக்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதால் அவர்களுக்கு எதிராக ஒரு குழுவை அரசாங்கமே உருவாக்கி அவர்களுக்குள் மோதலை ஏற்படுத்தி மிகப் பெரிய இன அழிப்பை நடத்தி வருகிறது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள இந்தியாவை, மொழி வாரி மாநிலங்களாக பிரித்தது நிர்வாக வசதிக்காக மட்டுமல்ல. ஒரு மனிதனின் அடையாளம் மொழி தான். கிறிஸ்தவன், இஸ்லாம் என உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அவர்களிலும் தமிழ் பேசுகிறவர்கள் இருக்கிறார்கள் என கூறிய அவர், நம்முடைய கலாச்சாரத்தை விட உயர்ந்த கலாச்சாரம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.

சிதம்பரம் நடராஜர் கோவில் 1500 வருடத்திற்கு முன்பு நம்முடைய முன்னோர்கள் கட்டி இருக்கிறார்கள். இந்த நாட்டில் கண்மூடித் தனமாகக் கலாச்சாரத்தை கொண்டு வரவில்லை. கொள்கை ரீதியாக கொண்டு வந்து இருக்கிறார்கள். பழைய நாடாளுமன்ற கட்டிடமே சிறப்பாக உள்ளது. பெருமைக்காக புதிய நாடாளுமன்றத்தை வடிவமைத்து அதற்கு திறப்பு விழா நடத்தியுள்ளனர். புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பாஜகவினர் அடித்த லூட்டிகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து பேசிய அவர்கள், 10 ரயில் விபத்துகள் நடந்தால் 7 ரயில் விபத்துக்கள் தண்டவாளம் பழுதடைந்துள்ளதால் நடைபெறுகிறது என்று கூறுகிறார்கள். ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று, இன்னும் ஒரு வார காலத்திற்குள் ரயில்வே துறை அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லையென்றால் 234 தொகுதியிலும் தமிழக காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

‘ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை’

Arivazhagan Chinnasamy

மகளிர் பிரீமியர் லீக் போட்டி; டெல்லி கேபிடல்ஸ் அணி அபார வெற்றி

Jayasheeba

நீதிமன்ற தீர்ப்பால் இபிஎஸ்-க்கு பின்னடைவு இல்லை – முன்னாள் அமைச்சர்

Halley Karthik