முக்கியச் செய்திகள் தமிழகம்

போட்டித் தேர்வின்றி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் – ஓபிஎஸ் வலியுறுத்தல்

தகுதித் தேர்வு முடித்த ஆசிரியர்களை போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சி பொறுப்பேற்று 19 மாதங்கள் கடந்தும் விடியலுக்காக காத்துக்கொண்டிருக்கக் கூடிய அவல நிலைக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் திமுக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத நிலையில், இது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல் என்று ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். மறு நியமன போட்டித் தேர்வுக்கான அரசாணையை ரத்து செய்துவிட்டு, காலிப் பணியிடங்களை போட்டித் தேர்வின்றி நிரப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில் கொள்கை முடிவு தான் எடுக்கப்பட வேண்டுமே தவிர, கூடுதல் நிதிச் சுமை ஏதும் அரசுக்கு ஏற்பட வாய்ப்பில்லை என்றும், மீண்டும் போட்டித் தேர்வு என்பது திமுகவின் தேர்தல் வாக்குறுதிக்கு முரணானது என்றும் தனது அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கனமழை பாதிப்பிற்கு உரிய நிவாரணம் அறிவிக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் -அய்யாக்கண்ணு

EZHILARASAN D

மத வெறியை தூண்டிவிட்டு அதில் நீச்சல் அடிக்க நினைப்பவர்கள் பாஜகவினர் -அமைச்சர் பொன்முடி

G SaravanaKumar

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்; பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்

G SaravanaKumar