இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி இந்தியா-வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 73 ரன்கள் விளாசினார். வங்கதேச அணி தரப்பில் ஷகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளும், எபடாட் ஹுசைன் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 46 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. வங்கதேச அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் லிட்டன் தாஸ் 41 ரன்களும், மெஹிடி ஹசன் 38 ரன்களும் குவித்தனர். இந்தியா சார்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளும், குல்தீப் சென் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.