முக்கியச் செய்திகள் தமிழகம்

மாணவருக்கு விஷம் கொடுத்த விவகாரத்தில் திடீர் திருப்பம்

காரைக்காலில் மகளின் படிப்புக்கு போட்டியாக இருந்த மாணவனை, சக மாணவியின் தாயாரே விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்து கொலை செய்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், கொலை நடந்தது எப்படி என்பது போலீஸ் விசாரணையில் முழுமையாக தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாணவனை கொலை செய்ததாக மாணவியின் தாயார் சகாயராணி கைது செய்யப்பட்டு புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். காரைக்கால் நீதிமன்றத்தில் புதன் கிழமை காலையில் ஆஜர்படுத்தப்பட்ட சாகாயராணியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மகளிர் போலீசார் முன்னிலையில் 6 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன. சிறுவனுக்கு குளிர் பணத்தில் கலந்து கொடுத்தது பேதிமருந்து என்றும், மாதா கோயில் வீதியிலுள்ள ஒரு நாட்டு மருந்துக் கடையில் இம்மருந்தை வாங்கியதாகவும் சகாயராணி போலீசாரிடம் கூறியுள்ளார். ஆனால் மருத்துவர்கள் ஆய்வு செய்ததில் சிறுவன் பேதி மருந்தால் உயிரிழக்கவில்லை என்றும், குளிர்பானத்தில் விஷம் கலந்து தரப்பட்டதால் தான் உயிரிழந்தார் என்றும் உறுதியாக தெரிவித்தனர்.

இந்நிலையில் காரைக்கால் காமராஜர் சாலையில் இதயம் என்ற பெயரில் மளிகை கடை வைத்திருக்கும் சாதிக் என்பவர் தாமாக முன்வந்து போலீசாரிடம் சில அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார். சகாயராணி கடந்த 2-ம் தேதி எனது கடைக்கு வந்து எலிபேஸ்ட் வாங்கியதாகவும், அதை குழந்தைகள் சாப்பிட்டால் என்னவாகும் என்று கேட்டு சென்றதாகவும் கூறினார். மேலும், உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த எனது பேரன் உயிரிழந்து விட்டதால் சென்னை சென்று விட்டேன்.கடந்த 10-ம் தேதி வீட்டிற்கு வந்த பின்னரே மாணவன் கொலை செய்யப்பட்ட விவரம் அறிந்து தாமே முன்வந்து வாக்குமூலம் அளிக்க வந்ததாகவும் போலீசாரிடம் சாதிக் கூறினார்.

சகாய ராணியின் வாக்குமூலத்தால் குழப்பத்தில் இருந்த போலீசார், மளிகை கடைக்காரர் சாதிக் கொடுத்த தகவல்களால் தெளிவுப்பெற்றனர். மேலும், சாதிக்கின் பக்கத்து கடையில் இருந்த சிசிடிவி கேமிராவில் சகாயராணி பைக்கில் வந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. மேலும் சாதிக் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து சகாயராணியிடம் போலீசார் ஆதாரங்களை காட்டி விசாரணை நடத்தினர்.

வசமாக சிக்கியதை தெரிந்து கொண்ட சகாயராணி, எலி பேஸ்ட் வாங்கி கலந்து கொடுத்ததை ஒப்புக் கொண்டார். அதை வாக்குமூலமாகவும் கொடுத்தார். இந்த ஆதாரம் ஒன்றுதான் இவ்வழக்கினை போக்கே மாற்றி விட்டதாகவும், இல்லையெனில் இவ்வழக்கில் குற்றத்தை நிரூபிக்க கடுமையாக போராட வேண்டியிருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாஜக ஆட்சி தொடர்ந்தால் இங்கு எதுவும் நடக்கலாம்-முரசொலி தலையங்கம்

Web Editor

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா!

Gayathri Venkatesan

குஜராத் அரசு மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளில் 13,000 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு!

Niruban Chakkaaravarthi