சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கருடன்’ திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சசிகுமார், சூரி இணைந்து நடித்துள்ள ‘கருடன்’ திரைப்படம் வரும் மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள படம் ‘கருடன்’. இந்தப் படத்தை ‘எதிர் நீச்சல்’,…

சசிகுமார், சூரி இணைந்து நடித்துள்ள ‘கருடன்’ திரைப்படம் வரும் மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள படம் ‘கருடன்’. இந்தப் படத்தை ‘எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். படத்தில் சூரி தவிர்த்து, சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அண்மையில் வெளியான இப்படத்தின் டைட்டில் க்ளிம்ஸ் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பை வீடியோ மூலம் படக்குழு தெரிவித்துள்ளது. அந்த வீடியோவில் ஆக்ரோஷத்துடன் சூரி கத்தும் காட்சி கவனத்தை ஈர்க்கிறது. அத்துடன் மற்ற சில காட்சிகளும் வந்து செல்கின்றன.

இந்த வீடியோ ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாத இறுதியில் படம் திரைக்கு வருகிறது. விரைவில் ட்ரெய்லர் வெளியாக உள்ளது.

https://twitter.com/sooriofficial/status/1790012575029264593

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.