முக்கியச் செய்திகள் தமிழகம்

காதலுக்கு தூது விட சொல்லி மிரட்டல்; மாணவி தற்கொலை

அரியலூர் அருகே, காதலுக்கு உதவி செய்ய சொல்லி மிரட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

கடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூஜா. இவரின் தோழியை அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். தனது காதலுக்கு உதவி செய்யுமாறு, பூஜாவை அந்த இளைஞரும், அவரது நண்பர்களும் வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது. பூஜா அதற்கு மறுப்பு தெரிவித்ததால், அவரது தந்தை வேலாயுதம் மற்றும் பூஜா மீது, அந்த இளைஞர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த வேலாயுதமும், பூஜாவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து, மாணவி பூஜா தரப்பினர் போலீசில் புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனிடையே, சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து மாணவி பூஜா வீட்டுக்கு வந்த நிலையில் இளைஞர் தரப்பினர் அவரை கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த அவர், விஷம் குடித்ததுள்ளார். இதையடுத்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதில் ஆத்திரமடைந்த பூஜாவின் உறவினர்கள் தாங்கள் அளித்த புகார் குறித்து சரியாக போலீசார் விசாரணை நடத்தாதே அவரின் மரணத்திற்கு போலீசாரே காரணம் எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Halley karthi

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம்!

Vandhana

கோவிஷீல்டைத் தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசி விலையும் உயர்வு!

Ezhilarasan