முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

நீட் தேர்வுக்கு பதிலாக சீட் தேர்வு – மநீம தேர்தல் அறிக்கை வெளியீடு

நீட் தேர்வுக்கு பதிலாக மாநில பாடத்திட்டத்தை உள்ளடக்கிய, சீட் தேர்வு கொண்டுவரப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையில் உள்ள சாராம்சத்தை அரசியல் கொள்கை பிரகடனமாக கமல்ஹாசன் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதில், மக்களாட்சி, அறிவார்ந்த அரசியல், சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி என்ற ஐந்து தலைப்புகளில் மநீமவின் கொள்கைகளை அவர் வெளியிட்டுள்ளார்.

உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி கல்விக்காக, கல்விமுறையில் மாற்றம் செய்யப்படும் எனவும், உலகத்தோடு போட்டிபோடும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் கமல்ஹாசன் கூறியுள்ளார். மேலும் எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு பதிலாக மாநில பாடத்திட்டத்தை உள்ளடக்கிய சீட் (SEET) தேர்வு கொண்டுவரப்படும் என அதில் தெரிவித்திருந்தார்.

நஷ்டத்தில் இயங்கும் அனைத்து அரசு நிறுவனங்களும், லாபத்தில் இயங்குவதற்கு ஏற்ப அறிவார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டவழிமுறைகளை பின்பற்றி மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் அரசியல் நடவடிக்கைகளை மக்கள் நீதி மய்யம் மேற்கொள்ளும் என்றும் கமல்ஹாசன் சூளுரைத்துள்ளார்.

விவசாயம், தொழில், உற்பத்தி மற்றும் சேவை ஆகிய துறைகளின் வளர்ச்சியை உயர்த்துவதன் மூலம், தமிகழத்தின் பொருளாதாரம் மற்றும் தனி நபர் வருமானத்தை உயர்த்துவோம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நியூட்ரினோ திட்டத்திற்கு இடம் இல்லை: முதலமைச்சரைப் பாராட்டுகிறேன் – வைகோ எம்.பி அறிக்கை

Arivazhagan Chinnasamy

5ஜி ஏலம் குறித்து பேச ஆ.ராசாவுக்கு தகுதியில்லை- வானதி சீனிவாசன்

G SaravanaKumar

10.5 சதவீத உள்ஒதுக்கீடு மற்ற சமுதாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாது :கே.பி.அன்பழகன் !

Niruban Chakkaaravarthi