32.7 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

சிவாஜியை போல் நடிக்க விருப்பமில்லை – ஜெயம் ரவி

ராஜ ராஜ சோழன் கதாபாத்திரத்தில் நான் என்னுடைய வழியில் நான் சிறப்பாக நடித்து முடித்துள்ளேன் என  ஜெயரம் ரவி கூறியுள்ளார். 

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ,ஜஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். கடந்த ஆண்டே இப்படத்தின் முதல் பாகம் வெளியானது தற்போது வரும் ஏப்ரல் 28 அன்று இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதற்காக இப்படக்குழுவினர் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மும்பை,பெங்களூர் போன்ற இடங்களில் புரோமஷனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர். பெங்களூரில் நடைபெற்ற இப்படத்தின் நிகழ்ச்சியில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜெயம் ரவி, நான் படங்களில் நல்லவனாக நடிக்க விருப்பமில்லை. ஏனெனில் ஒரே மாதிரியான நடிப்பை மட்டும் வெளிபடுத்த முடியும் .ஆனால் கெட்டவனாக நடித்தால் தனது நடிப்பு திறனை நன்றாக வெளி படுத்தலாம். குறிப்பாக இந்த ராஜ ராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடிக்க மணி சார் நிறைய திறன்களை சொல்லி தந்தார். இந்த கதாபாத்திரத்திற்காக யாரையும் பார்த்து நான் காப்பி அடிக்க விருப்பமில்லை.

பல வருடங்களுக்கு முன்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்த ராஜ ராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் நான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் முன்பு அந்த படத்தை நான் பார்க்கவில்லை. ஒரு வேளை அந்த படத்தை நான் பார்த்திருந்தால் அவரின் நடிப்பின் தாக்கம் என்னுள் வந்திருக்கும், என் நடிப்பு அவர் நடிப்பிற்கு 10 சதவீதம் கூட ஈடாகாது. என்னால் எப்படி நடிக்க முடியுமோ அப்படி நடித்தேன். மணி சாரை நம்புனேன், கல்கியை நம்பினேன், கடவுளை நம்பினேன். என்னுடைய வழியில் நான் சிறப்பாக நடித்து முடித்துள்ளேன் என பெருமிதமாக கூறியுள்ளார் ஜெயம் ரவி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading