“கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை, முன்னாள் எம்எல்ஏ சுவராஜ் விமர்சித்தாரா?” – உண்மை என்ன?

This News is Fact Checked by India Today (Malayalam) கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சிபிஎம் தலைவர்களில் ஒருவருமான எம்.சுவராஜ் விமர்சனம் செய்ததாக வீடியோ பகிரப்பட்டு வந்தது.…

This News is Fact Checked by India Today (Malayalam)

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சிபிஎம் தலைவர்களில் ஒருவருமான எம்.சுவராஜ் விமர்சனம் செய்ததாக வீடியோ பகிரப்பட்டு வந்தது. ஆனால் இந்த வீடியோவானது தவறான தகவலுடன் பகிரப்படுகிறது என தெரியவந்துள்ளது.

சிபிஎம் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.சுவராஜ், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை கேலி செய்து பேசும்படியான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 11 விநாடிகள் கொண்ட இந்த வீடியோவில் எம்.ஸ்வராஜ் உரையின் போது முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினரின் படமும் இடம்பெற்றுள்ளது. 

ஆனால் இந்தியா டுடே சார்பில் நடத்தப்பட்ட உண்மை சரிபார்ப்பின்போது, வைரலான இந்த வீடியோ பதிவு தவறானவை என்று கண்டறியப்பட்டது. மேலும் எம்.சுவராஜின் எதிர்வினை வாதம் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக அல்ல, மாறாக ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு (யுடிஎஃப்) எதிரானது என்பது கண்டறியப்பட்டது.

உண்மை சரிபார்ப்பு

இதுகுறித்து இந்தியா டுடே (மலையாளம்) சார்பில், ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்யப்பட்டதன் மூலம் வீடியோவின் கீஃப்ரேம்களை சரிபார்த்ததில், கடந்த ஏப்ரல் 20-ம் தேதி முதல் இதே போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது கண்டறியப்பட்டது. இந்தக் காணொளிகளில் எம்.சுவராஜ் காங்கிரஸை விமர்சிப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளதால், இதன் பின்னணி குறித்து தெளிவான பிம்பம் கிடைக்கவில்லை. ஆனால், இன்ஸ்டாகிராம் ஐடியின் வாட்டர்மார்க் வீடியோவில் பார்க்க முடிந்தது.

M.Swaraj Fans பக்கத்தில் இந்த வீடியோவின் சற்று நீளமான பதிப்பு கிடைத்தது. ஏப்ரல் 20-ம் தேதியன்று வெளியிடப்பட்ட வீடியோவைப் பார்த்தால், ஸ்வராஜ் தனது தேர்தல் பிரசாரத்தில் கட்சிக் கொடிகளுக்குப் பதிலாக பலூன்களைப் பயன்படுத்துவதற்கான யுடிஎஃப் அமைப்பை கேலி செய்தார் என்பது கண்டறியப்பட்டது. இந்த வீடியோ, பொன்னானி மற்றும் லோக்சபா தேர்தல் போன்ற ஹேஷ்டேக்குகளுடன் பகிரப்பட்டுள்ளது.

வீடியோவின் மேல் வலது பக்கத்தில், NCV என்ற யூ டியூப் சேனலின் லோகோவை காண முடிந்தது.  இதற்கு கீழே 19.04.2024 தேதியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் வீடியோவை பொன்னானி பகுதியில் உள்ள உள்ளூர் ஊடகமான என்சிவியின் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டது கண்டறியப்பட்டது.

இந்த வீடியோவிலும் சுவராஜ் காங்கிரசை விமர்சிப்பது தெளிவாக தெரிகிறது.  ஆனால் வீடியோவின் முழு வடிவம் சேனலில் கொடுக்கப்படவில்லை.  இதனிடையே, பொன்னானியில் எம்.சுவராஜ் கலந்து கொண்ட தேர்தல் நிகழ்ச்சிகள் குறித்து கீவேர்டு தேடுதல் நடத்திய போது, ​​’பேஜ் டிவி’ என்ற மற்றொரு முகநூல் எம்.சுவராஜ் பேசிய முழுப் பகுதியும் கிடைத்தது. இந்த உரையில் சுவராஜ் காங்கிரசை விமர்சிப்பது தெளிவாக தெரிகிறது.

ராகுல் காந்தியின் பிரசாரத்தில் முஸ்லீம் லீக் கொடி ஏற்றினால், அதை பாகிஸ்தானின் கொடி என்று தவறாக நினைக்கும் ஆர்எஸ்எஸ்-ன் செயல்திட்டம் தோற்கடிக்கப்பட வேண்டும். மாறாக, காங்கிரஸ்க்கு தைரியம் இல்லாததால்தான் முஸ்லீம் லீக் கொடி நிராகரிக்கப்பட்டது என்று ஸ்வராஜ் கேலி செய்கிறார். 

முடிவு:

கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் வைரலாகும் இந்த வீடியோவில் எம்.சுவராஜ், முதலமைச்சர் பினராயி விஜயனை கிண்டல் செய்யவில்லை எனவும், யுடிஎஃப் அமைப்பை விமர்சிக்கிறார் என்பது தெளிவாகிறது. எனவே பகிரப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்றூ நிரூபணமாகிறது.  

Note: This story was originally published by India Today (Malayalam) and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective….

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.