வெப்பத்தை தணிக்க திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் குவியும் மக்கள்!

கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் குழந்தைகள் முதல் பெரியர்கள் வரை உடலை மணலில் புதைத்து “சன் பாத்” எடுத்து உடல் வெப்பத்தை தணித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கோடை…

கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயில்
கடற்கரையில் குழந்தைகள் முதல் பெரியர்கள் வரை உடலை மணலில் புதைத்து “சன்
பாத்” எடுத்து உடல் வெப்பத்தை தணித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கோடை கால வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.  பல்வேறு
மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் மேல் வெப்பநிலையானது
பதிவாகியிருந்தது.  அந்த வகையில் இதுவரை இல்லாத அளவு வெய்யிலின் தாக்கம்
அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

இந்தநிலையில் தமிழ்நாட்டில் சிறந்த ஆன்மீக சுற்றுலாத் தளமாக இருக்ககூடிய உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் கோடை விடுமுறையையொட்டி பல்வேறு பகுதிகளிலிருந்தும் குடும்பத்துடன்
வந்திருந்த பக்தர்கள் கடலில் உற்சாகமாக குளியலிட்டு மகிழ்ந்தனர்.  மேலும்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடற்கரை மணலுக்குள் உடலை புதைத்து
சன் பாத் எடுத்து உடல் வெப்பத்தை தணித்து வருகின்றனர்.

சன்பாத் எடுப்பதால் உடல் வெப்பம் தணிந்து புத்துணர்ச்சி கிடைப்பதாகவும்
அவர்கள் தெரிவித்துள்ளனர்.  மேலும் இதுபோன்ற மணல் குளியல் உடலில் கிருமிகளை
அழித்து கிருமிநாசினியாக செயல்படுவதாகவும் உடல் எலும்புகளை வலுப்படுத்த
உதவுவதாகவும் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.