முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

தன்னை அடித்து துன்புறுத்தியதாக காவல்துறை உதவி ஆய்வாளர் மீது நடிகை ராதா புகார்!

தன்னை அடித்து துன்புறுத்துவதாக, தனது கணவரும் காவல்துறையின் உதவி ஆய்வாளருமான வசந்தராஜா என்பவர் மீது நடிகை ராதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை சாலிகிராமம் லோகையா தெருவில் வசித்து வருகிறார் நடிகை ராதா (39). இவர் சுந்தராடிராவல்ஸ் உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவருக்கு ஏற்கனவே தயாரிப்பாளர் ஒருவருடன் திருமணமாகி குழந்தை ஒன்றும் உள்ளது. தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை ராதா தனியாக வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு எண்ணூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் வசந்தராஜா (44) என்பவருடன் ராதவிற்கு பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. வசந்தராஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதனையடுத்து வசந்தராஜாவும், நடிகை ராதாவும் திருமணம் செய்து கொண்டு, கடந்த ஓராண்டாக சாலிகிராமத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் நடிகை ராதாவின் நடத்தையில் சந்தேகமடைந்த வசந்தராஜா, அவரை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. அன்மையில் ராதாவின் தாயார் ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்துள்ளார்.

அப்போது, ராதாவின் தாயார் வசந்தராஜாவை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வசந்தராஜா, ராதாவின் தாயயை அடிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அதனால் தனது கணவர் வசந்தராஜா தன்னை அடித்து துன்புறுத்தி கொடுமை படுத்துவதாகவும் அதனை தட்டிக்கேட்ட தனது தாயை அவர் தாக்க முயன்றுள்ளார் எனக் கூறி, நடிகை ராதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வசந்தராஜா மீது நடவடிக்கை எடுக்ககோரி புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில், வசந்தராஜாவிடம் போலீசார் விசாரணை செய்துள்ளனர். அதில், நடிகை ராதாவின், வற்புறுத்தலின் பேரில், ராதாவின் வீட்டில் வைத்து அவரை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். பிறகு ராதாவின் பழைய ஆண் நண்பர்களுடன் தற்போதுவரை அவர் தொடர்பில் இருப்பதாகவும் அந்த தொடர்புகளை துண்டிக்க சொன்னபோது ராதா மறுத்துவிட்ட காரணத்தால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

அர்ச்சகர்களை நியமிப்பதற்கு இடைக்கால தடை கிடையாது: உயர்நீதிமன்றம்

Saravana Kumar

வங்கக் கடலோரம் முத்தமிழறிஞருக்கு நினைவிடம்

Saravana Kumar

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் பொன்முடி

Ezhilarasan