ஐபிஎல் டி20 தொடரின் 60வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதரபாத், பஞ்சாப், டெல்லி, குஜராத், லக்னோ ஆகிய 10 பங்கேற்று விளையாடி வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
லீக் போட்டிகள் நடந்து வரும் நிலையில், நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதியது. இந்த போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி வீழ்த்தியது. அதன் மூலம் புள்ளிப் பட்டியலில் குஜராத் அணி 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதையும் படியுங்கள் : தடுமாறிய சிஎஸ்கே… – 35 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி!
இந்நிலையில் இந்த தொடரில் இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ள 60-வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 11 போட்டிகள் விளையாடி உள்ள நிலையில், 8 வெற்றி, 3 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேநேரம் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 12 போட்டிகள் விளையாடி உள்ள நிலையில் 4 வெற்றி, 8 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.