வள்ளியூர் அருகே பல்வேறு சமுதாய மக்களும் சேர்ந்து கொண்டாடிய சுடலை ஆண்டவர் கோயிலின் கொடை விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தேரை குளத்தில் ஶ்ரீ சாலைக்கரை சுடலை
ஆண்டவர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். ஒவ்வொரு மாதமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இக்கோயிலில் கொடை விழா இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு சுடலை ஆண்டவர் திருக்கோயில் கொடை விழா நேற்று நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேர சோதனை நிறைவு! கஞ்சா சிகரெட், பேங்க் பாஸ்புக் பறிமுதல்! வீட்டுக்கு சீல்!
இந்த கொடை விழாவை பல்வேறு சமுதாய மக்களும் சேர்ந்து கொண்டாடினர். கொடை விழாவின் சிகர நிகழ்வாக சாமக்கொடை நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை 10 மணியளவில் தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் 2 மணியளவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து சுடலை ஆண்டவருக்கு அபிஷேகம் செய்த்னர். அதன் பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை பூஜைகளும் நடைபெற்றன.
இதையடுத்து, தொடர்ந்து ஆடு, கோழி போன்றவைகளை பலியிட்டு, பொங்கலிட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர். சாம கொடையின் போது சாமி ஆடி மயானம் போய் வரும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கொடை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.







