முக்கியச் செய்திகள் தமிழகம்

3 கோயில்கள், பல கோடி மதிப்பிலான 2 சாமி சிலைகளை காணவில்லை! – பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சியில் இருந்த 3 கோயிகளும், விழுப்புரத்தில் உள்ள பழமை வாய்ந்த கோயிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான திருபுவன சுந்தரர் மற்றும் திருபுவன சுந்தரி ஆகிய இரண்டு சிலைகளும் காணாமல் போனதாக முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் குற்றம் சாட்டியுள்ளார்.

விழுப்புரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில் முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை ஐஜி பொன்.மாணிக்கவேல் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூரில், தற்போது பக்தஜனேஸ்வரர் கோயில் மட்டுமே இருந்து வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த ஊரில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கலிநாரீஸ்வரன் சிவன் கோயில், திருமேற்றளி மகாவிஷ்ணு கோயில், அகத்தீஸ்வரம் கோயில் என மேலும் 3 கோயில்கள் இருந்துள்ளதற்கான ஆவணங்கள் உள்ளன. 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் சுதந்திரம் வழங்கிவிட்டு சென்ற பிறகு, காலப்போக்கில் அந்த 3 கோயில்களுமே இருந்த இடம் தெரியாமல் அடிச்சுவடியே இல்லாமல் போய்விட்டது.

 

இதையும் படியுங்கள் : திருப்பூர் சாலை விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

இதேபோல் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏமப்பூரில் உள்ள பழமை வாய்ந்த கோயிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான திருபுவன சுந்தரர் மற்றும் திருபுவன சுந்தரி ஆகிய இரண்டு சாமி சிலைகளும் காணாமல் போயிருக்கிறது. இந்த இரண்டு சாமி சிலைகளும் தற்போது வெளிநாட்டில் உள்ளதால் இது குறித்து சிவனடியார்கள் மூலம் காவல்துறையில் புகார் அளிக்க உள்ளோம்.

புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளை நாடுவோம். அவர்களும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம். திருநாவலூரில் காணாமல் போயிருக்கும் பல்லவர் காலத்து 3 கோயில்களையும் கண்டுபிடிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் உள்ள சாமி சிலைகள் அனைத்துமே இங்கிருந்து தான் சென்றிருக்கிறது” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இடம் மாறும் கோயம்பேடு பேருந்து நிலையம் – ஏற்பாடுகள் என்ன?

Web Editor

அமெரிக்காவில் காந்தி சிலை சேதம்; மத்திய அரசு கண்டனம்!

Saravana

பெங்களூரில் ஊரடங்கு இல்லை: கர்நாடகா அரசு

எல்.ரேணுகாதேவி