ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்க உள்ள 20 அணிகளும், 15 பேர் கொண்ட அணியை மே 1-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி அறிவுறுத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து, இதில் பங்கேற்கும் ஒவ்வொரு நாடுகளும் போட்டிக்கான தங்கள் அணிகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
🚨India’s squad for ICC Men’s T20 World Cup 2024 announced 🚨
Let's get ready to cheer for #TeamIndia #T20WorldCup pic.twitter.com/jIxsYeJkYW
— BCCI (@BCCI) April 30, 2024
அதன்படி இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குரூப் Aல் உள்ள இந்திய அணி ஜூன் 5 ஆம் தேதி அயர்லாந்து அணியுடன் தனது முதல் போட்டியை விளையாடுகிறது. ஜூன் 9 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடனும், ஜூன் 12 ஆம் தேதி அமெரிக்கா, ஜூன் 15 ஆம் தேதி கனடா ஆகிய அணிகளுடனும் மோதுகிறது.
இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியல் :
ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷப் பந்த்( விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன்( விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா,(துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ், யுவேந்திர சகல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். மாற்று வீரர்களாக சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அஹ்மத், ஆஷிஷ் கான் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெறாதது அவரது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.