முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி- மருத்துவ பரிசோதனை துவக்கம்.!

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி அதிகாலை 6:00 மணி முதல் மாடுபிடி வீரர்களின் மருத்துவ பரிசோதனை துவங்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையொட்டி மதுரை மாவட்டத்தில் 3 வது ஜல்லிக்கட்டாக மதுரை அலங்கால்லூர் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெறுகிறதுஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி அதிகாலை 6:00 மணி முதல் மாடுபிடி வீரர்களின் மருத்துவ பரிசோதனை துவங்கப்பட்டது. இந்த மருத்துவ பரிசோதனையில் மாடுபிடி வீரர்களை 130 மேற்பட்ட மருத்துவ குழுவினர் மருத்துவர் செவிலியர் உதவியாளர் என அனைவரும் பரிசோதனை செய்யப் படுகின்றனர்.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கடந்த ஜனவரி 10ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக 1784 பதிவுற்ற நிலையில் அதில் ஆன்லைன் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 800 மாடுபிடி வீரர்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவருமே மருத்துவ பரிசோதனை செய்யப்படும் போது மது அருந்தி உள்ளார்களா அல்லது 18 வயதிற்கு கீழ் உள்ளார்களா , அதிக எடை கொண்டவர்கள் ஏதேனும் போதை வஸ்துக்கள் பயன்படுத்தி இருந்தால் அல்லது மூச்சு திணறல் போன்றவை இருந்தால் அவர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில்அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்த மருத்துவ பரிசோதனை மூலம் தெரிவிக்கப்பட்டு சரியாக உள்ள மாடுபிடி வீரர்கள் தகுதி அடிப்படையில் உள்ள அனைத்து மாடுபிடி வீரர்களும் ஐம்பது பேர் கொண்ட குழுவாக சுமார் 10 சுற்றுகள் நடைபெறும் போட்டியில் மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்வார்கள்.

இதில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கு முதல் பரிசு கார் ,பைக் மற்றும் பீரோ,  கட்டில் டிவி, சைக்கிள், தங்க காசு போன்ற பரிசுகள் பாலமேடு ஜல்லிக்கட்டு விழா குழுவினரால் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளருக்கு வழங்கப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,672 பேருக்கு கொரோனா!

Halley Karthik

விராட் கோலியின் பார்ம் சூரியகுமார் யாதவின் கான்ஃபிடன்ஸை உடைக்குமா?

Web Editor

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading