மாஸ்.. என்ட்ரி… ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

 நடிகர் அஜித்குமார் நடிக்கும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு திரைப்படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன்,…

 நடிகர் அஜித்குமார் நடிக்கும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு திரைப்படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார்.

அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.இந்த திரைப்படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : மும்பையில் இருந்து கடத்தி வரப்பட்ட 2750 போதை மாத்திரைகள் : 6 பேரை கைது செய்த காவல்துறை!

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ‘விடாமுயற்சி’ வெளியாகிறது. ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது. இந்த திரைப்படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் எப்படி உருவாகிறது என்ற வீடியோவும் அண்மையில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்நிலையில், இன்று இரவு 7.03 மணியளவில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.