விராட் கோலியின் பார்ம் சூரியகுமார் யாதவின் கான்ஃபிடன்ஸை உடைக்குமா?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் பார்ம் இளம் வீரர் சூரியகுமார் யாதவின் கான்ஃபிடன்ஸை உடைக்குமா? 8 வது டி20 உலகக் கோப்பை மீதான பார்வை என்ன? என்பது குறித்து இந்தக் கட்டுரையில்…

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் பார்ம் இளம் வீரர் சூரியகுமார் யாதவின் கான்ஃபிடன்ஸை உடைக்குமா? 8 வது டி20 உலகக் கோப்பை மீதான பார்வை என்ன? என்பது குறித்து இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

8 வது ஐசிசி உலகக் கோப்பை T20 போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட அணிகள், ரேட்டிங் அடிப்படையில் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அதே சமயம் இலங்கை, வங்கதேசம், அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற தகுதி போட்டிகளில் விளையாட உள்ளன.

முக்கிய போட்டிகளுக்கு முன்பு தகுதி சுற்றுக்கு உண்டான போட்டிகள், அக்டோபர் 16 ஆம் தேதி முதல் நடத்தப்பட உள்ளன. ROUND 1 என கணக்கிடப்பட்டு நடத்தப்படும் அந்த போட்டிகளில், குரூப் 1 மற்றும் 2 என இரு பிரிவுகள் உள்ளன. அதன்படி குரூப் A இல் ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, நமீபியா, இலங்கை அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் B இல் மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஜிம்பாவே அணிகள் இடம்பெற்றுள்ளன.

உலக கோப்பை டி20 லீக் முக்கிய போட்டிகள் தொடக்கம்:

முக்கிய லீக் போட்டிகளை பொருத்தவரை அவை அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன. இதில் ஏற்கனவே சூப்பர் 12 சுற்றில் 8 அணிகள் ரேட்டிங் முறையில் இடம்பெற்று இருப்பதால், அவை இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. அதன்படி குரூப் 1 இல் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதி சுற்றில் வெற்றி பெரும் அணியும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணியும் இணையும். குரூப் 2 பொறுத்தவரை இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், தென் ஆப்ரிக்கா, தகுதி சுற்றில் வெற்றி பெரும் அணியும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணியும் இணையும்.

போட்டிகள் அனைத்தும் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை பொறுத்து அவ்வபோது போட்டி நடைபெறும் இடங்களில் மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி மெல்போர்ன், கீலாங், சிட்னி, பிரிஸ்பேன், பெர்த், அடிலெய்டு உள்ளிட்ட இடங்களில் 45 போட்டிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. அரையிறுதி போட்டிகள் 1 மற்றும் 2 ஆகியவை சிட்னி மற்றும் அடிலெய்டு மைதானங்களிலும், இறுதிப் போட்டியானது வரலாற்றுச் சிறப்புமிக்க MCG கிரிக்கெட் மைதானத்திலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு:

ஏற்கனவே சூப்பர் 12 சுற்றில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் தங்கள் அணிகளை வெளியிட்டு இருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்னும் உலகக் கோப்பை T20 கிரிக்கெட் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள அணியை அறிவிக்கவில்லை. இந்தியாவை பொருத்தவரை அணியின் பார்ம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருவதை அடுத்து பந்துவீச்சில் இருந்தே அந்த சந்தேகம் தொடங்குகிறது.

இந்திய அணியின் பேஸ் பேட்டரியாக விளங்கும், அனுபவம் வாய்ந்த முகமது ஷமி, ஜாஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார் உள்ளிட்டோர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. தீபக் சாஹர், ஹர்ஷ்தீப் படேல் போன்றோருக்கு உண்டான வாய்ப்பு வழங்கும் வகையில், சமீபத்திய பார்மில் அவர்கள் இந்திய அணியை சந்தேகத்திற்கு உட்படுத்தவில்லை.

அதே சமயம் ஐபிஎல் போட்டிகளில் அனைவரின் பார்வையும் தன் மீது திரும்ப செய்த இளம் நட்சத்திரமான உம்ரான் மாலிக், இந்திய அணியில் இணைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பின்னர்ஸ் மற்றும் ஓபனிங் ஆர்டர் குறித்த சந்தேகம்:

ஸ்பின்னர்ஸ் பொறுத்த வரை ஜடேஜா காயத்தில் இருந்து மீண்டால், அவர் நிச்சயம் இடம் பெற வாய்ப்பும், ரவிச்சந்திரன் அஷ்வின் உறுதியாக அணியில் சேர்க்கப்படவும் வாய்ப்புள்ளது. கூடுதலாக ஆல் ரவுண்டர் பேட்ஸ்மேன் தீபக் ஹூடா, யுவேந்திர சாஹல், அக்ஷர் படேல் உள்ளிட்டோரை தேர்வு செய்வதில் தான் இந்திய அணிக்கு குழப்பமே நிகழ்கிறது.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுத்தவரை ஹார்திக் பாண்டியா உறுதியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஹார்திக் பாண்டியா உடனான காம்போவாக இன்னொரு வேகப்பந்துவீச்சாளர் பார்ட் டைம் பவுலராக தேர்வு செய்யப்பட்டாலும் அதில் ஆச்சரியமில்லை. கடந்த இரண்டு டி29 போட்டிகளில் ஹார்திக் பாண்டியாவுக்கு பேட்டிங்கில் புரொமோஷன் வழங்கியது இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை தேர்வு செய்வதில் சவால் நீடிக்கிறது.

இருப்பினும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அடிப்படையில் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் இந்தியக் குழுவில் நிச்சயம் சேர்க்கப்படுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஓபனிங் பேட்ஸ்மேன் முதல் முதல் 4 விக்கெட்டுகள் குறித்த வரிசையில் இந்திய அணியில் தொடர் குழப்பம் எழுந்து வரும் சூழலில், ரோஹித் ஷர்மா, விராத் கோலி, கே.எல். ராகுல் உள்ளிட்டோர் உறுதியாக இடம்பெறும் பட்சத்தில் சூரிய குமார் யாதவ் அனைத்து போட்டிகளிலும் சேர்க்கப்படுவது இந்திய அணியின் முதல் இரண்டு போட்டிகளை பொறுத்தே தெரியவரும்.

எது எப்படியோ, இன்னும் ஒரு சில நாட்களில், உலக கோப்பை T20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது. காயம் காரணமாக விலகி இருப்பவர்களின் பங்கேற்பு குறித்த சந்தேகம், புதுமுக வீரர்களின் பங்கேற்பு, அனுபவமிக்க வீரர்களின் ஓய்வு உள்ளிட்டவைக்கான பதில் கூடிய விரைவில் தெரியவரும். இந்திய அணி தனது இரண்டாவது டி20 கோப்பையை வெல்லும் முனைப்பில் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.