33.6 C
Chennai
May 31, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு பட்ஜெட்: மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்க ரூ.50 கோடி!

2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் பட்ஜெட் தாக்கல் தொடங்கியது.

முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது 2022-2023 ஆம் ஆண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக்கை ஜார்ஜ் கோட்டையில் இருக்கக்கூடிய சட்டமன்ற அரங்கில் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாடு பட்ஜெட் சிறப்பம்சங்கள்:

  • குறுவை சாகுபடிக்காக டெல்டாவைச் சேர்ந்த 10 மாவட்டங்களில் 4,694 கிமீ கால்வாய்களை தூர் வார ஒப்புதல்; வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
  • தமிழ்நாட்டில் 7 இடங்களில் அகழாய்வு செய்யப்படும்; தொல்லியல் ஆய்வுகளுக்காக ரூ.7 கோடி ஒதுக்கீடு. விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ.10 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
  • தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.
  • வனத்துறை பரப்பளவை அதிகரிக்க வன ஆணையம் அமைக்கப்படும்.
  • இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு.
  • அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி; ஆண்டுக்கு 4 இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படும்.
  • 15 மாவட்டங்களில் முன் மாதிரி பள்ளிகள் தொடங்கப்படும், அதற்காக ரூ.125 கோடி நிதிஒதுக்கீடு; அறிவு சார் நகரம் உருவாக்கப்படும், ஆராய்ச்சிப் பூங்கா நிறுவ ஊக்குவிக்கப்படும்.
  • அரசுப்பள்ளிகள் தவிர பிற பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் வழங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு.
  • நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களின் தனித்திறன் அடையாளம் காணப்பட்டு ஊக்குவிக்கப்படும்; அதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.
  • அரசு கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவது அரசின் கடமை; அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading