நடிகர் பாலகிருஷ்ணா தள்ளிவிட்ட விவகாரம்! விளக்கம் அளித்த நடிகை அஞ்சலி!

‘கேங்ஸ் ஆஃப் கோதாவரி’  திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நிகழ்ந்த சர்ச்சை குறித்து பதிலளித்துள்ளார் நடிகை அஞ்சலி. நந்தமூரி பாலகிருஷ்ணா என்னும் பாலகிருஷ்ணா தெலுங்கில் புகழ்பெற்ற நடிகராக திகழ்ந்து வருகிறார்.  தெலுங்கு சினிமாவில் பாலகிருஷ்ணா படமென்றாலே…

கேங்ஸ் ஆஃப் கோதாவரி’  திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நிகழ்ந்த சர்ச்சை குறித்து பதிலளித்துள்ளார் நடிகை அஞ்சலி.

நந்தமூரி பாலகிருஷ்ணா என்னும் பாலகிருஷ்ணா தெலுங்கில் புகழ்பெற்ற நடிகராக திகழ்ந்து வருகிறார்.  தெலுங்கு சினிமாவில் பாலகிருஷ்ணா படமென்றாலே தனி ரசிகர்கள் உண்டு.  இறுதியாக இவர் நடிப்பில் வெளியான, வீர சிம்ஹா ரெட்டி, பகவந்த் கேசரி திரைப்படங்கள் சிறந்த வரவேற்பை பெற்றது.

பாலய்யா அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.  பொதுமேடைகளில் திடீரென ரசிகர்களை அதட்டுவது,  புகைப்படம் எடுக்க வந்தவர்களிடம் கோவப்படுவது என சர்ச்சைக்குரிய செயல்களை செய்வார்.

இந்நிலையில்,  ‘கேங்ஸ் ஆஃப் கோதாவரி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.  சிறப்பு விருந்தினராக வந்த பாலகிருஷ்ணா,  மேடை ஏறியதும் நடிகை அஞ்சலியைத் தள்ளி நிற்கச் சொன்னார்.  அஞ்சலியும் நகர்ந்தார்.  திடீரென நடிகை அஞ்சலியைத் தள்ளிவிட்டார்.  தடுமாறிய அஞ்சலி, சாதாரணமாக எடுத்துக்கொண்டு சிரித்தார்.

இதையும் படியுங்கள் : ஆஸ்திரேலிய அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள்!

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது. இந்நிலையில் நடிகை அஞ்சலி இது குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில்  பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகை அஞ்சலி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது :

“கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த பாலகிருஷ்ணா அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாலகிருஷ்ணாவும் நானும் ஒருவருக்கொருவர்  மரியாதையுடன் பழகி வருகிறோம் என்பதையும், நீண்ட காலமாக நல்ல நட்புடன் இருந்து வருகிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடன் நிகழ்வில் பங்கேற்றது மகிழ்ச்சி”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.