முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஜூன் 20ம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான மூன்று இந்திய வீரர்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான கங்குலி, ராகுல் டிராவிட், விராட் கோலி ஆகிய மூவருமே ஜூன் 20ம் தேதி தான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகினர்.

தற்போது பிசிசிஐ தலைவராக உள்ள கங்குலி, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட் ஆகிய இருவரும் இங்கிலாந்தின் லார்ட்ஸில் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமாகினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

டிராவிட், கங்குலி ஆகிய இருவரும் கடந்த 1996ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி அறிமுகமாகினர். விராட் கோலி 2011ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி அறிமுகமானார். கங்குலி அறிமுக ஆட்டத்தில் சதம் பதிவு செய்தார். டிராவிட் 95 ரன்கள் எடுத்திருந்தார்.

கங்குலி

ஆனால், கோலியால் பெரிய ஸ்கோர் எதுவும் அறிமுக ஆட்டத்தில் எடுக்க முடியவில்லை. எனினும், 11 ஆண்டுகளில் 101 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடி 27 சதம், 28 அரை சதங்களுடன் மொத்தம் 8043 ரன்களை எடுத்துள்ளார். இந்த மூன்று வீரர்களுமே இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாதவர்களாக வலம் வருகின்றனர்.

பெங்களூர் அணி வாழ்த்து

இதனிடையே, டெஸ்ட் கிரிக்கெட்டில் 11 ஆண்டுகளை நிறைவு செய்த விராட் கோலிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தது.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நெல்லை மாவட்டத்தில் புத்தக திருவிழா

Saravana Kumar

விஜய் மக்கள் இயக்கத்திற்கு ஆட்டோ சின்னம் தர மறுப்பு

Saravana Kumar

உ.பி வன்முறை: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு, வீட்டுக்காவலில் அகிலேஷ் யாதவ்

Halley Karthik