பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய பெங்களூர் அணி இரண்டாவது தகுதிச்சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
கேப்டனாக கோலி பதவி வகித்த ஒரு சீசனில் கூட பெங்களூர் அணி ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதில்லை. இந்த சீசனில் பிளெசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
எனினும், பிளே-ஆஃப் வரை முன்னேறிய பெங்களூர், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. லீக் ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடியது. ஆனால், துரதிருஷ்டவசமாக அந்த அணியால் ஃபைனலுக்கு முன்னேற முடியவில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், அந்த அணியில் இடம்பெற்றுள்ள விராட் கோலி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “சில நேரங்களில் வெற்றி பெறலாம். சில நேரங்களில் வெற்றி பெற முடியாமல் போகலாம். ஆனால், நீங்கள் (சக வீரர்கள்) கிரிக்கெட்டை சிறப்பானதாக மாற்றியுள்ளீர்கள். கிரிக்கெட்டில் கற்றுக் கொள்வதற்கு முடிவு கிடையாது. அணி நிர்வாகம், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த சீசனில் சந்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.