முக்கியச் செய்திகள் தமிழகம்

காக்கி சட்டையை கழட்டிட்டு வாண்ணே… சண்டைக்கு அழைத்த ரவுடி மீது வழக்குப்பதிவு

மதுரை நகர் தனிப்படை தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் செந்தில், இவரை சண்டைக்கு அழைத்ததாக பந்தல்குடியை சேர்ந்த ரவுடி ராஜேஸை காவல்துறையினர் தேடிவந்த நிலையில் தற்போது அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ஆடியோ ஒன்று வைரலானது. இதில் போலீசார் ஒருவரை மற்றொருவர் சண்டைக்கு அழைப்பது பதிவாகியிருந்தது. இது குறித்து விசாரிக்கையில் மதுரை நகர் தனிப்படை தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் செந்தில், இவரை பந்தல்குடியை சேர்ந்த ரவுடி ராஜேஸ் காக்கி சட்டையை கழட்டிட்டு சண்டைக்கு வாண்ணே என அழைத்துள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதனையடுத்து ரவுடியை காவல்துறை தேடி வந்தது. ஆனால் ரவுடி தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் தற்போது ரவுடி ராஜேஸ் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ராஜேஸ் மீது ஏற்கெனவே கொலை, கொள்ளை மற்றும் போக்சோ என 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன என தெரியவந்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

சுதந்திர தினம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Saravana Kumar

முதல்வர் பழனிசாமி வேட்புமனுத் தாக்கல்!

Gayathri Venkatesan

7வது நாளாக தொடரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு!

Jeba Arul Robinson