முக்கியச் செய்திகள் விளையாட்டு

கடைசி ஒருநாள் போட்டி; இந்தியா 409 ரன்கள் குவிப்பு

இந்தியா-வங்கதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வங்கதேச அணிக்கு 409 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியா-வங்கதேசம் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் இன்று நடக்கிறது. தொடரை இழந்த இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சாஹர், குல்தீப் சென் ஆகியோர் போட்டியில் இருந்து விலகி உள்ளனர். இதையடுத்து சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அணியில் இணைந்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளது. இந்த போட்டியில் காயமடைந்த கேப்டன் ரோகித், தீபக் சகாருக்கு பதிலாக இஷன் கிஷன், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 8 பந்தில் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார்.

மற்றொரு தொடக்க வீரரான இளம் வீரர் இஷான் கிஷன் அதிரடியாக பேட்டிங் ஆடி வேகமாக ஸ்கோர் செய்து நல்ல தொடக்கத்தை இந்திய அணிக்கு அமைத்து கொடுத்தார். 3வதாக இறங்கிய கோலி, இஷான் கிஷனுடன் இணைந்து சிறப்பாக ஆடினார். அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதமடித்தார். இஷான் கிஷன் சதத்திற்கு பின்னர் அதிரடியாக விளையாடி சிக்ஸர் மழை பொழிந்து இரட்டை சதத்தை கடந்து சாதனை படைத்தார். இறுதியில் 10 சிக்ஸர்கள், 23 பவுண்டரிகள் அடித்து, 210 ரன்களும், விராட் கோலி 113 ரன்களும் எடுத்தனர். 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 409 ரன்கள் இந்திய அணி எடுத்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கூடங்குளம் அணு உலை விரிவாக்கத்தை கைவிட வேண்டும்: திருமாவளவன்

Vandhana

தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

Dinesh A

5 பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் கைது

G SaravanaKumar