முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

திருநெல்வேலியில் தொடரும் சாதிய கொடுமை – மேலும் ஒரு சம்பவம்!

திருநெல்வேலியில் இரண்டு இளைஞர்கள் சாதியின் பேரில்,  ஆடை களையப்பட்டு சிறுநீர் கழிக்கப்பட்டு,  தாக்கப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், இதே போல் மேலும் ஒரு சம்பவம் அறங்கேறியுள்ளது.

கடந்த 30-ம் தேதி திருநெல்வேலி மாநகரத்திற்கு உட்பட்ட மணி மூர்த்தீஸ்வரம் ஆற்றுப்பகுதியில் இளைஞர்கள் இரண்டு பேரை, 6 பேர் கொண்ட மர்ம கும்பல் தாக்கி அவர்களிடமிருந்த செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் எந்த சாதி என கேட்டு தெரிந்துகொண்ட பின், இளைஞர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் மீது சிறுநீர் கழித்துள்ளனர். அவர்களை மாலை முதல் இரவு வரை வைத்திருந்து சித்தரவதை செய்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இருவரையும் மீட்ட ஊர்மக்கள் அவர்களை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் அறிந்து வழக்கு பதிவு செய்த திருநெல்வேலி மாநகர் தச்சநல்லூர் காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பொன்மணி (25), நல்லமுத்து (21), ஆயிரம்(19), ராமர்(22), சிவா(22), லட்சுமணன் (20) ஆகிய 6 பேரை கைது செய்தனர். 

இந்த சம்பவம் அரங்கேறிய அதே வேளையில் ஆச்சிமடம் பகுதியில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். இவர் வெட்டியம்பந்தி என்ற கிராமத்தை சேர்ந்தவர். அப்போது அவ்வழியாக சென்ற கும்பல், அவரை வழிமறித்து அவரது சாதியை கேட்டு கல்லால் அடித்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஊர் பெயரையும் சாதி பெயரையும் கேட்டு தாக்குதல் நடத்தியதாக படுகாயம் அடைந்த இளைஞர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய கும்பலை தேடி வருகின்றனர். மேலும் தாக்குதல் நடத்தியவர்களை தீவிரமாக தேடி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

தமிழ்நாடு சட்டப்பேரவை; இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்

Jayasheeba

கரூர்: 10 ஆண்டுகளாக முறைகேடாக செயல்படும் சுங்கச்சாவடி…? – போராட்டத்தில் ஈடுபட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

Web Editor

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்.15 வரை நீட்டிப்பு!

Jeni

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading