அம்பானி வீட்டுக் கல்யாணம் | தடபுடலான இரவு விருந்தில் ஜொலித்த “ஆண்டிலியா!”

மகன் திருமணத்தை முன்னிட்டு அம்பானி குடும்பத்தினர் மும்பையில் உள்ள அவர்களின் இல்லமான ஆண்டிலியாவில் ஆடம்பரமான விருந்து அளித்தனர்.   ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் விரேன் மெர்ச்சென்ட்டின்…

மகன் திருமணத்தை முன்னிட்டு அம்பானி குடும்பத்தினர் மும்பையில் உள்ள அவர்களின் இல்லமான ஆண்டிலியாவில் ஆடம்பரமான விருந்து அளித்தனர்.  

ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் விரேன் மெர்ச்சென்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சென்ட்டின் திருமணம் வரும் ஜூலை 12 ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது.

இந்த திருமணத்திற்கான கொண்டாட்டங்கள் கடந்த மார்ச் மாதம் ஜாம் நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸ் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தின் போது, ஜாம் நகரில் உள்ள அனைவருக்கும் விருந்துகள் பரிமாறப்பட்டது.  ரிலையன்ஸ் குழுமத்தலைவர் அம்பானியே அவர்களுக்கு பரிமாறி மகிழ்ந்தார்.

மேலும் அந்த விழாவில் உலக புகழ்பெற்ற பாடகி ரிஹானா, மேஜிக் கலைஞர் டேவிட் பிளேனும் பொழுது போக்கு நிகழ்ச்சி, இந்திய பாடகர்கள் அரிஜித் சிங், அஜய்-அதுல் மற்றும் தில்ஜித் தோசன்ஜ் ஆகியோரின் பாடல் நிகழ்ச்சியுடன் திரை பிரபலங்களான ஷாருக் கான், சல்மான் கான், அமீர் கான் ஆகியோரும் நடனமாடினர்.

அதுமட்டுமில்லாமல் அந்த கொண்டாட்டத்தின்போது மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது முன்னாள் மனைவி மெலிண்டா, மெட்டா சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க், மோர்கன் ஸ்டான்லி சிஇஓ டெட் பிக், டிஸ்னி சிஇஓ பாப் இகர், பிளாக்ராக் சிஇஓ லாரி ஃபிங்க், அட்னாக் சிஇஓ சுல்தான் அகமது அல் ஜாபர் மற்றும் எல் ரோத்ஸ்சைல்ட் தலைவர் லின் ஃபாரெஸ்டர் டி ரோத்ஸ்சைல்ட், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் மகள் இவான்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து, மே 29 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை முக்கிய விருந்தினர்களுடன் ரோம் முதல் கேன்ஸ் வரை கப்பலில் சுற்றுலா சென்றனர்.

தற்போது இந்த கொண்டாட்டத்தின் ஒரு பங்காக, அம்பானி குடும்பத்தினர் மும்பையில் உள்ள அவர்களின் ஆடம்பர இல்லமான ஆண்டிலியாவில் ஆடம்பரமான விருந்து அளித்தனர். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உட்பட பல விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

இதையொட்டி, ஆண்டிலியா முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன்னதாக மணமகன் ஆனந்த் மற்றும் அவரது தந்தை முகேஷ் அம்பானி விருந்தினர்களை வரவேற்கும் காட்சியைப் காண முடிந்தது.

சில நாட்களுக்கு முன், முகேஷ் அம்பானி மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து தனது மகனின் திருமணத்திற்கு அழைத்தார். முன்னதாக, ஆனந்த் அம்பானி பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமாரையும் தனது திருமணத்திற்கு நேரில் அழைத்திருந்தார். இது தவிர திருமணத்திற்கு ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகியோரையும் அழைத்திருந்தார். அதன் படங்கள் மற்றும் வீடியோவும் வைரலானது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.