32.8 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

‘அடங்காத அசுரன்தான்’ – வெளியானது ‘ராயன்’ திரைப்படத்தின் முதல் பாடல்!

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘அடங்காத அசுரன்’ வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 
தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ‘கேப்டன் மில்லர்’  திரைப்படம் மக்களிடையே கலவையான வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தனுஷின் 50-வது படமாக உருவாகும் ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், புத்தாண்டை முன்னிட்டு வெளியான புதிய போஸ்டர் ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து படம் ஜுன் மாதம் வெளியாகும் எனவும், படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்தது.  இந்நிலையில் படத்தின் முதல் பாடலான ‘அடங்காத அசுரன்’ இன்று வெளியாகி தனுஷின் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading