அகமதாபாத் விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த 4 ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில்
இலங்கையை சேர்ந்த 4 ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் 4 பேரும் கொழும்பில் இருந்து சென்னை வந்து பின் சென்னையிலிருந்து அகமதாபாத் சென்றுள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டிலுள்ள அவர்கள் அமைப்பிடமிருந்து அடுத்தக்கட்ட தகவலுக்காகாக காத்திருப்பதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். இவர்களிடம் தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.







