போதைப் பொருள் தொடர்பாக நடந்த ரெய்டில், பிரபல நடிகை ஷ்வேதா குமாரி கைது செய்யப்பட்டிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் உயிரிழப்புக்கு பிறகு, பாலிவுட் சினிமா உலகில் போதைப் பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இந்த வழக்கில் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து, நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர், ராகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பிய போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அதுமட்டுமின்றி, கன்னட நடிகைகளான ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நடிகை சஞ்சனாவுக்கு சமீபத்தில் தான் ஜாமீன் கிடைத்தது.

இந்நிலையில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெலுங்கு நடிகை ஷ்வேதா குமாரி (27) என்பவரை கைது செய்துள்ளனர். மும்பை, தானே மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப் பொருள் விற்பனை செய்பவர்களுடன் நடிகைக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்திருக்கிறது.
இதுகுறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மண்டல இயக்குனர் சமீர் வான்கடே கூறுகையில், “ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷ்வேதா குமாரி என்பவருக்கு ‘mephedrone’ எனும் ஒரு வகையான போதைப் பொருள் விற்கும் கூட்டத்துடன் தொடர்பு இருப்பதாக தெரிய வந்ததையடுத்து கைது செய்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகை ஷ்வேதா குமாரி கன்னடத்தில் ரிங் மாஸ்டர் உட்பட சில படங்களிலும் தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
போதைப் பொருள் வழக்கில் தென்னிந்திய நடிகை ஒருவர் கைதாகி இருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.