பிரதமர் மோடியின் வேடத்தில் நடிக்கிறேனா? – நடிகர் சத்யராஜ் அளித்த சுவாரஸ்ய பதில்!

பிரதமர் மோடி கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அதற்கு நடிகர் சத்யராஜ் விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி நாயகனாக ஜொலித்த நடிகர்களில் மிக முக்கியமானவர் சத்யராஜ்.  ரஜினி ,…

பிரதமர் மோடி கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அதற்கு நடிகர் சத்யராஜ் விளக்கமளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி நாயகனாக ஜொலித்த நடிகர்களில் மிக முக்கியமானவர் சத்யராஜ்.  ரஜினி , கமல்,  சரத் குமார் போன்ற நடிகர்களுடன் தனது திரைப்பயணத்தை தொடங்கிய இன்றுவரை மார்க்கெட் குறையாத நடிகராக திகழ்கிறார்.

சில வருடங்களுக்கு முன்பு பிரமாண்டமாக உருவான பாகுபலி படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் அனைவரின் கவனத்தையும் பெற்றார்.  இதனைத் தொடர்ந்து தெலுங்கு , மலையாளம் என பல திரைப்படங்களில்  குணசித்திர கதாபாத்திரங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதாக தகவல்கள சமூக வலைதளங்களில் வெளியாகின.  பான் இந்தியா திரைப்படமாக இப்படம் பிரம்மாண்டப் பொருட்செலவில் தயாராகவுள்ளதாகவும், விரைவில் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பரவிய செய்திக்கு நடிகர் சத்யராஜ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.  இதுகுறித்து சத்யராஜ் கூறியதாவது,  பிரதமர் மோடியின் வேடத்தில் நான் நடிக்கிறேன் என்பது சமூக வலைதளம் மூலம் தான் எனக்கே தெரிகிறது. இது எனக்கு புது செய்தி. நாத்திகம் பேசிய எம்.ஆர்.ராதா பல படங்களில் ஆன்மிகவாதியாக நடித்துள்ளார். வாய்ப்பு வந்தால் பார்க்கலாம் ” என சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.