முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிரான மனு தள்ளுபடி!! உச்சநீதிமன்றம் அதிரடி

சென்னை மெரினா கடல் பகுதியில் பேனா சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை மெரினா கடலில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக 81 கோடி ரூபாய் செலவில் “பேனா” சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்திலும் பேனா நினைவுச்சின்னம் அமைக்க ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திட்டத்தை தொடர தமிழக அரசு முனைப்பு காட்டியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த சூழலில் ” கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும். கடற்கரையோரங்களில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனக்கோரி மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், மெரினா கடலில் 134 அடி உயரத்துக்கு பின் சின்னம் அமைப்பது கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் அனைத்தையும் மீறிய நடவடிக்கை ஆகும்.

அதேபோல் காலநிலை மாற்றத்தால் அதிக மழைபொழிவு ஏற்படுவது வாடிக்கையாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் இவ்வாறான தேவையில்லாத, முக்கியத்துவமற்ற கட்டுமீன நிட்டங்களால் கடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். எனவே பேனா அமைக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். மேலும், இந்தியா முழுவதுமாக 6632 கிலோமீட்டர் அளவுக்கு கடற்கரை உள்ளது, இதில் 33.6சதவிகிதம் அளவுக்கு கடல் அரிப்பால் பாதிப்படைந்துள்ளன.

எனவே நாடு முழுவதும் கடற்கரை அருகே கட்டுமானத்துக்கு தடை விதிப்பதோடு, கடல் அரிப்பை தடுக்கும் விதமாக கடற்கரை ஓரங்களில் அதிக அளவிலான மரங்களை நடுவதற்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒடிசா உள்ளிட்ட கடலோர மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வலக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு பொதுநலன் கருதி இந்த மனு தாக்கல் செய்யப்படவில்லை. இது எந்த மாதிரியான மனு? என அதிருப்தி தெரிவித்தது மனுவை தள்ளுபடி செய்தனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

தமிழ்நாடு அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

Web Editor

தமிழ்நாட்டை பின்பற்றும் ஒடிசா | உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் உடலுக்கு அரசு மரியாதை!

Web Editor

இந்தோனேசியாவில் நடுக்கடலில் 53 வீரர்கள் மரணம்; கடைசியாக அவர்கள் பாடிய பாடல் வைரல்!

EZHILARASAN D

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading