இந்தோனேசியாவில் நடுக்கடலில் போர்ப்பயிற்சியில் ஈடுபட்ட 53 கடற்படை வீரர்கள் மரணமடைந்தனர். அவர்கள் இறுதியாக பாடிய பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தோனேசியா நாட்டிற்கு சொந்தமான கடற்படைக்கு சொந்தமான, கே.ஆர்.ஐ. நங்கலா-402 நீர்மூழ்கிக்கப்பல் கடந்த புதன்கிழமை பாலித்தீவின் வட பகுதியில் வழக்கமான போர்ப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. இந்த கப்பலில் மொத்தம் 53 கடற்படை வீரர்கள் இருந்தனர். இந்நிலையில், பயிற்சியின்போது கப்பல் தீடீரென மாயமானது
இதையடுத்து அந்நாட்டு அரசு கப்பல் மாயமானதை அறிவித்து தேடும் பணியில் ஈடுபட்டது. 6 போர்க்கப்பல், ஹெலிகாப்டர், விமானங்கள் உள்ளிட்டவை தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதுதவிர ஆஸ்திரேலியா, அமெரிக்காவின் விமானங்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டன.
இந்நிலையில், மாயமான போர்க்கப்பல் கடலில் மூழ்கிவிட்டதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதை உறுதிபடுத்தும் விதமாக கப்பலின் சில உதிரி பாகங்களும், வீரர்கள் பயன்படுத்திய பொருட்களையும் தேடுதலில் ஈடுபட்ட கடற்படை வீரர்கள் கண்டுபிடித்தனர். இந்த நிலையில், உயிரிழந்த 53 வீரர்கள் கடைசியாக பாடிய பாடல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.







