இந்திய நாட்டிற்கு பாரத் என பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அதற்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் இன்ஸ்டாகிராம் புகைப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணிக்கு I.N.D.I.A. என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கூட்டணியானது இந்தியா என்ற பொருள்படும் வகையில் இருக்கிறது. இந்த பெயருக்கு ஆரம்பத்தில் இருந்தே பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜி20 உச்சி மாநாடு தொடர்பான ஒரு அழைப்பிதழில் இந்தியா என்பதற்கு பதில் பாரதம் என அச்சிடப்பட்டுள்ளது. இதேபோல் ஜி 20 விருந்தினர்களுக்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழில் பாரத் குடியரசு தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த செயல் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.இது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ், திமுக கட்சியின் முக்கிய தலைவர்கள் இது குறித்து தங்களது கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பாஜக கட்சியினரும் அதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நேற்று ஆளும் கட்சிக்கு ஆதரவாக பிரபல கிரிக்கெட்டர் சேவாக் கருத்து தெரிவித்த நிலையில், அவர் மீதும் கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், சேவாக்கை தொடர்ந்து தோனியும் இதற்கு ஆதரவாக பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கொடியின் பின்னணியில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் “I am blessed to be a bharatiya” என தோனி தனது இன்ஸ்டாகிராம் Dp’யை தோனி மாற்றியுள்ளார். பெயர் மாற்றத்திற்கு கடுமையாக எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், தோனியின் இந்த பதிவு ரசிகர்களுக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது.
ஆனால், நாட்டின் 75-ஆவது சுதந்திர நாள் கொண்டாட்டத்தின் போது, பாரத் என்ற சொல் இடம்பெற்ற முகப்புப் படத்தை தோனி மாற்றினார். இன்ஸ்டாகிராமில் 4.5 கோடிக்கும் அதிகமான பின்பற்றுபவர்களை கொண்ட தோனி, எப்போதாவதுதான் தனது சொந்த விஷயங்களை மட்டுமே பகிர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.