முக்கியச் செய்திகள் தமிழகம்

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அரசு செயல்படுகிறது – அமைச்சர் செஞ்சி மஸ்தான்

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திமுக அரசு செயல்பட்டு வருவதாக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

கோவை கோபாலபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில், காந்தியின் 76வது நினைவு தினத்தை முன்னிட்டு, பல்சமய நல்லுறவு இயக்கம் மற்றும் இந்திய கலாச்சார நட்பு கழகம் இணைந்து, மத நல்லிணக்க கருத்தரங்கம் நடத்தியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் ஹாஜி முகமது ரபிக் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், தமிழ்நாடு சிறுபான்மைத்துறை மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், மனிதநேயத்தோடு அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும். ஒரு மனிதன் எந்த காலகட்டத்திலும் மாறக்கூடாது. மனதில் அமைதியும், உறுதியும் இருக்க வேண்டும். எண்ணம், சொல், செயலில் உறுதியாக இருக்க வேண்டும்.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற கருத்தோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதன்பேரில் மாநிலம் முழுவதும் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். அனைவரும் மதத்தை கடந்து மனிதநேயத்தோடு வாழ வேண்டும்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பால் குடித்துவிட்டு தூங்கிய மூன்றரை வயது குழந்தை மூச்சுத் திணறலால் பலி

Web Editor

திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்து விபத்து: 11 பேர் காயம்

Web Editor

விசாரணை அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை-மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்

Web Editor