முக்கியச் செய்திகள் தமிழகம்

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவின் கருத்து பட்டப்பகலில் காணும் கனவு -வைகோ

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் மாற்றம் நிகழும் என்ற பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவின் கருத்து பட்டப்பகலில் காணும் கனவு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

திருநெல்வேலி மாநகராட்சியின் முன்னாள் மாமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின்
முக்கிய பிரமுகரான டேனியல் ஆபிரஹாம் இல்ல திருமண விழாவில் மதிமுக பொதுச்
செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது செய்தியாளர் சந்தித்து பேசிய அவர்,  தமிழகத்தில் ஒவ்வொரு மதம் சார்ந்த மக்களும், அவரவர் விருப்பப்படி சடங்குகளை நிகழ்த்தி திருமணங்களை சிறப்பாக நடத்தி
வருகிறார்கள். ஆனால் இந்த ஒற்றுமையை குலைக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி கொள்கை பின்பற்றி நடைபெறுகிறது. இதை எதிர்த்துப் போராடுகின்ற பெரு சக்தியாக தமிழ்நாடு திகழ்கின்றது என்றார்.

அத்துடன், தமிழகத்தில் நடைபெறுகின்ற திமுக ஆட்சி அனைத்து மத நம்பிக்கைகளுக்கும் நம்பிக்கை தரும் வகையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவின் மத நம்பிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. இது மற்ற மாநிலங்களுக்கும் வழிகாட்டி மாநிலமாக செயல்படுகிறது என கூறினார்.

மேலும், தமிழகத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, சட்டமன்ற தேர்தலிலும் மாற்றம் நிகழும் என சொல்லும் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவின் கருத்து பட்டப் பகலில் காண்கின்ற கனவு. தமிழ்நாட்டில் அது ஒருபோதும் நடக்காது.
2024 ல் திமுக தலைமையிலான இதே கூட்டணியே மீண்டும் வெற்றி பெறும் என கூறினார்.

அத்துடன்,  பெரியார் தொடங்கி பல்வேறு தமிழ் அறிஞர்கள் வளர்த்த இந்த திராவிட இயக்க மண்ணில் பாஜகவின் கொள்கைகள் ஊடுருவ முடியாது. சேது சமுத்திர திட்டம் மிகவும் அவசியமான ஒன்று. தூத்துக்குடி துறைமுகத்தின் இந்தியாவின் வளர்ச்சிக்கும் தென்னாட்டு வளர்ச்சிக்கும் சேது சமுத்திரத் திட்டம் வழிவகை செய்யும். தென் தமிழகத்திற்கு மிகவும் பயனுறுத்திட்டமான செண்பகவல்லி அணைை சீரமைப்பு குறித்து மூன்று முறை கேரள மாநில முதல்வரிடம் பேசி இருக்கிறேன். அதில் உள்ள பிரச்சனையைை புரிந்து கொண்ட கேரள அரசு அதை செயல்படுத்தாமல் இருப்பது வருத்தத்திற்குரியது என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள்

G SaravanaKumar

விசாரணை நடக்கிறது; போராட்டத்தை கைவிடுங்கள்-டிஜிபி சைலேந்திர பாபு வலியுறுத்தல்

Web Editor

தொடர்ந்து வாய்தா.. ராஜேந்திர பாலாஜிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

Gayathri Venkatesan