முக்கியச் செய்திகள் தமிழகம்

பதிவுத்துறையில் முறைகேடு: விரைவில் விசாரணை – அமைச்சர்

பதிவுத்துறையில் முறைகேடு தொடர்பாக விசாரிக்க உயர்நிலைக்குழு அமைக்கப்பட உள்ளது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரை சிம்மக்கல் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள மகாகவி பாரதியாரின் திரு உருவச் சிலைக்கு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி, “மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டமன்றத்தில் பல முக்கிய திட்டங்களை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

பதிவுத்துறையில் முறைகேடுகள் நடைபெற்றால் சார் பதிவாளர் உட்பட அனைத்து அலுவலர்களும் தண்டனை வழங்கப்படும். மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க வாய்ப்புள்ளது. இத்துறையில் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே இதுபோன்ற திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

விவசாய நிலங்கள் கட்டிடம் கட்டுவதற்கான நிலங்களாக அரசு வழிகாட்டுதலுக்கு மாறாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவையனைத்தும் கண்டறிந்து முறைப்படுத்தப்படும். இந்த முறைகேட்டில் தொடர்புடைய மற்ற துறையை சேர்ந்தவர்களுக்கும் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெறும் சட்ட வரைவு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

2016 முதல் 2021 வரை வெளிப்படையாகவே பத்திரப்பதிவு மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. முறைகேடு தொடர்பாக விசாரணை உயர்நிலைக்குழு அமைக்கப்பட உள்ளது. இன்னும் 6 மாத காலத்திற்குள் பதிவு பதிவு மேலும் எளிமையாக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

’எங்ககிட்ட ஆதாரம் இருக்கு’: நடிகர் ஆர்யா வழக்கில் திடீர் திருப்பம்

Saravana Kumar

தம்பிதுரை மீதான வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Ezhilarasan

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா பாதிப்பு

Halley karthi