முக்கியச் செய்திகள் உலகம்

சுவர்களில் சிறுநீர் கழிப்பவர்கள் மீது, திருப்பி சிறுநீரை அடிக்கும் சுவர்; இணையத்தில் வைரல்

சுவர்களில் சிறுநீர் கழிப்பவர்கள் மீது திருப்பி சிறுநீரை அடிக்கும் சுவர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

லண்டனில் சுவர்களில் சிறுநீர் கழித்தால், கழிப்பவர் மீதே சிறுநீர் திருப்பி அடிக்கும் வகையிலான நவீன பெயிண்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் அளித்த புகாரின் பேரில் இந்தப் பெயிண்ட், முக்கியமான 10 இடங்களில் உள்ள சுவர்களில் பூசப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கவுன்சில் அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த பெயிண்ட் முற்றிலும் ஒட்டவிடாமல் பல அடுக்குகளாகப் பூசப்படுகிறது. இதனால் சுவரில் படும் சிறுநீர் மற்றும் பிற திரவங்கள் மீண்டும் தெறித்து, அங்கு சிறுநீர் கழிப்போர் சற்றும் எதிர்பார்க்காத மிகவும் மோசமான ஆச்சரியத்தை அளிக்கிறது.

இந்த புதிய முயற்சி நல்ல பயனளிக்கவே, சோஹோ பகுதியில் உள்ள பல கட்டிடங்களின் இந்த ஆன்டி-பீ பெயிண்ட் பூசுவதற்கு கவுன்சில் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் கூட்டமாக உள்ள இடங்கள் மற்றும் அதிக அளவில் பொது சிறுநீர் கழிக்கும் பகுதிகள் இந்த ஆன்டி-பீ பெயிண்ட் பூசுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆன்டி-பீ பெயிண்ட்  குரித்த தகவல் வெளியாகிய நாள் முதலே இணையத்தில் இந்து குறித்த பல்வேறு வீடியோக்களும், மீம்ஸ்களும் பரவி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னை மெட்ரோவில் 63 ஆயிரம் பேர் பயணம்!

Vandhana

ஸ்ரீரங்கம் பகல்பத்து 2ம் நாள் உற்சவம்; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Jayasheeba

ரேஷன் கடைகளில் பனை பொருட்கள் விற்பனைக்கு நடவடிக்கை: வேளாண் அமைச்சர்

Gayathri Venkatesan