தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 264 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 27 ஆயிரத்து 936 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றில் இருந்து குணமடைந்த 31 ஆயிரத்து 223 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 17 லட்சத்து 70 ஆயிரத்து 503 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில், 478 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 220 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 258 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்களாவர்.
இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24 ஆயிரத்து 232 பேராக உள்ளது. தமிழகத்தில் 3 லட்சத்து ஆயிரத்து 781 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக கோவையில் 3,488 பேரும், அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 2,596 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Advertisement: