26.7 C
Chennai
May 8, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

Swiggy, Zomato-வுக்கு போட்டியாக அதிரடிக்காட்டும் ONDC ! இனி கம்மி விலையில் உணவு டெலிவரி

இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato-விற்கே கடும் போட்டிக் கொடுக்கும் விதமாக மத்திய அரசு உருவாக்கியிருந்த ONDC தளம் தற்போது புதிய பரிமாணத்தை பெற்று கம்மி விலையில் உணவு டெலிவரி செய்து வருவதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்திய டிஜிட்டல் சேவை துறையில் மிக முக்கியமான துறை என்றால் அது ஆன்லைன் புட் டெலிவரி சேவையும் மற்றும் குவிக் காமர்ஸ் துறையும் தான். அதிலும் குறிப்பாக, உணவு டெலிவரியை பொறுத்த வரை Swiggy மற்றும் Zomato ஆகிய இரு தனியார் நிறுவனங்களும்
நெடுங்காலமாக இந்தியா முழுவதும் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிறுவனங்கள் அறிமுகமான காலக்கட்டத்தில் 50 சதவீத தள்ளுபடி, 90 சதவீத தள்ளுபடி, குறித்த நேரத்திற்கு உணவு வரவில்லை என்றால் இலவசமாக உணவுகளை கொடுத்துவிட்டு செல்வது என புதிய புதிய பாணிகளை கையாண்டு வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்த்ததோடு, பல நபர்கள் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடும் பழக்கத்தையே கைவிட துவங்கினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இப்படிப்பட்ட நேரத்தில் தான் சமீபகாலமாக Swiggy மற்றும் Zomato நிறுவனங்கள் மெல்ல மெல்ல தங்களது கட்டணத்தை உயர்த்த துவங்கியதோடு, அத்தகைய கட்டணங்கள் நாம் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடும் விலையை விட மிக அதிகமாக வசூலிக்கப்படுவதாக
வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும் ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்து பழகிவிட்டதால், இப்போதும் பலர் இவர்களுக்கு வாடிக்கையாளர்களாக இருந்து வருகிறார்கள். இந்த நிலையில், தற்போது Swiggy மற்றும் Zomato போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி தளங்களில் வாங்கப்படும் உணவுகளை விட ONDC மூலம் ஆர்டர் செய்து வாங்கப்படும் உணவுகள் மிகமலிவான விலையில் கிடைப்பதாக இணைய உலகில் பேசப்பட்டு வருகிறது.

ONDC என்பது ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் கமெர்ஸ் (Open Network For Digital Commerce) என்ற பொருளுடைய ஒரு தளமாகும். சொல்ல போனால் இது மத்திய அரசால் இயக்கப்படும் இந்தியாவின் இ-காமெர்ஸ் ஆன்லைன் ஷாப்பிங் தளம். இதன் மூலமாக உணவு, வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், வீட்டை சுத்தம் செய்ய தேவைப்படும் பொருட்கள் என பலவற்றை இந்த ஆன்லைன் தளத்தின் மூலம் நம்மால் வாங்க முடியும். சிறு வணிகங்களையும் டிஜிட்டல் வர்த்தக துறைக்குள் கொண்டு
வரும் முயற்சியாக மத்திய அரசால் கடந்த 2021ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த தளம், துவக்கத்தில் சில தடுமாற்றங்களை சந்தித்தாலும் தற்போது ஆன்லைன் புட் டெலிவரி சேவையில் புதிய பரிமாணத்தை பெற்று வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றுள்ளது.

குறிப்பாக, McDonald’s, Taco Bell, Behrouz Biryani, Wow Momo, Pizza Hut மற்றும் Cafe Coffee Day போன்ற சில பிராண்டுகள் மட்டுமே தற்போது ONDC தளத்துடன் இணைந்து செயலாற்றி வந்தாலும், மலிவான விலையில் உணவு டெலிவரி செய்வதால் அதிக வாடிக்கையாளர்களையும் கவர்ந்து வருவதால், இது மேலும் விரிவடைந்து அதிகபடியான நிறுவனங்கள் இதனுடன் இணைந்து எதிர்காலத்தில் செயலாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உணவு டெலிவரி என்று மட்டும் அல்லாமல் பிற டெலிவிரி சேவைகளும் செய்யக்கூடிய வசதி இந்த தளத்தில் இருப்பதால் அவற்றிலும் கூடிய விரைவில் இந்த தளம் கால் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு , இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது என்பதால், இது மிகவும் நம்பகமானது என பலரும் நம்ப துவங்கியுள்ளனர்.

இதனால் பெங்களூருவில் துவக்கப்பட்டு இயங்கி வரும் ONDC, தற்போது இந்தியாவின் பல நகரங்களில் உணவு மற்றும் பல்வேறு பொருட்களை ஆர்டர் செய்ய உதவும் தளமாக மாறியுள்ளதோடு, இதன் மூலம் இந்தியாவின் ஆன்லைன் ஷாப்பிங் சேவை மற்றும் வருவாயை ONDC அதிகரிக்கும் என்று என எதிர்பாக்கப்படுகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading