முக்கியச் செய்திகள் இந்தியா

87 வயதில் 10வது பாஸ் செய்த ஓம் பிரகாஷ் சௌதாலா

முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சௌதாலா தனது 87-வது வயதில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஹரியானாவின் முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா, தனது 87 வயதில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர், உமர் அப்துல்லா, அரசியல்வாதிகள் என பல பிரபலங்கள் அவரை வாழ்த்தி பாராட்டி வருகின்றனர்.

உமர் அப்துல்லா தெரிவித்துள்ள டிவிட்டர் பதிவில், “கற்றுகொள்ள வயது தடையல்ல” என குறிப்பிட்டுள்ளார். அதேபோல, ‘வயது வெறும் எண்தான் என்ற வாசகத்தை நிரூபித்துக் காட்டியுள்ளார் ஹரியானாவின் முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சௌதாலா என நிம்ரத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்தி: ‘சீன அதிபர் ஜி ஜின்பிங் பெருமூளை அனீரிஸம் நோயால் அவதிபட்டுவருவதாக தகவல்’

‘தேர்வு மையத்தில் செய்தியாளர்களிடம் பேச மறுத்த ஓம் பிரகாஷ் சௌதாலா, “நான் ஒரு மாணவன்” என்று கூறியுள்ளார். இவருக்கு வயது தற்போது 87. கடந்தாண்டு 12ஆம் வகுப்பு தேர்வை எழுதிய சௌதாலாவின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டன. 10-ஆம் வகுப்பில் ஆங்கில பாடத்தில் பாஸ் செய்யாத காரணத்தினால் 12ஆம் வகுப்பு முடிவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 10-ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வையும் தனியாக எழுதி, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளை பாஸ் செய்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சௌதாலா. தேர்ச்சி பெற்ற முன்னாள் முதலமைச்சருக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் அபிஷேக் பச்சனும் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

8ம் தேதிக்குப் பிறகு திமுக வேட்பாளர் பட்டியல்!

Jeba Arul Robinson

திமுக கூட்டணியில் அதிக இடங்கள் கேட்போம்: கே.எஸ்.அழகிரி தகவல்!

Ezhilarasan

இயந்திரத்தில் கோளாறு..3 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தம்

Janani