சீன அதிபர் ஜி ஜின்பிங் பெருமூளை அனீரிஸம் நோயால் அவதிபட்டுவருவதாக கூறப்படுகிறது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் பெருமூளை அனீரிஸம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2021-ஆம் ஆண்டு இறுதியில் இருந்து அவர் இதற்காக மருத்துவம் பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர், அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்பவில்லை எனவும், பாரம்பரிய சீன மருத்துவத்தை அவர் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மூளைக்கு செல்லும் ரத்த நாளங்கள் இயல்பான அளவை விட மெல்லியதாக சுருங்குவதே இந்த நோயின் தன்மை என சொல்லப்படுகிறது.
கோவிட் தொடங்கியது முதல், பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் வரை அவர், வெளிநாட்டுத் தலைவர்கள் சந்திப்பை தவிர்த்தார். இதற்கு முன்னதாக மார்ச் 2019-ல், சீன அதிபர் ஜி ஜின்பிங் இத்தாலிக்கு சென்றார் அப்போது, அவரின் நடை வழக்கத்திற்கு மாறானதாக காணப்பட்டது. அதேபோல, பிரான்ஸ் சென்ற போது அவர் உட்கார மிகவும் சிரமப்பட்டார்.
அண்மைச் செய்தி: ‘தமிழ்த்தாய் வாழ்த்து பயிலும் அமெரிக்க மாணவர்கள்’
அக்டோபர் 2020-ல் ஷென்சென் நகரில் பொதுமக்கள் முன் சீன அதிபர் ஜி ஜின்பிங், உரையாற்றினார். அப்போது, அவர் மிகவும் மெதுவாகப் பேசினார். அத்துடன் அவருக்கு இருமல் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. இதனால், அவரின் உடல் நலம் குறித்த பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் பெருமூளை அனீரிஸம் நோயால் அவதிபட்டுவருவதாக கூறப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








