முக்கியச் செய்திகள் சினிமா

தீபாவளி ரேசில் இருந்து விலகியது சிம்புவின் மாநாடு

சிம்பு நடிப்பில் உருவான மாநாடு திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகாது என படக்குழு அறிவித்துள்ளது.   

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவான படம் மாநாடு. படத்தில், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன், மனோஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்தப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தது. இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மாநாடு படம் நல்லபடியாக வந்துள்ளது. அதன்மீது பெரும் நம்பிக்கை உள்ளது. தீபாவளி அன்று படத்தை வெளியிடலாம். ஆனால், என்னை நம்பி பட வியாபார ஒப்பந்தம் செய்தவர்கள் பாதிக்கப்படக்கூடாது. அதேபோல், திரையரங்க வெளியீட்டிற்காக பணம் போட்டவர்கள் என் படத்தின் மூலம் லாபம் அடைய வேண்டும் போன்ற சில காரணங்களால் பட வெளியீட்டு தேதி சில நாட்கள் தள்ளி நவம்பர் 25ம் தேதி வெளியாகிறது என தெரிவித்துள்ளார். மேலும் வெளியாகும் படங்கள் வெற்றி பெற வாழ்த்துகள். பொறுமையாக எங்கள் முடிவை ஏற்கப்போகும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள் என தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

புதுச்சேரியில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.3 ஆயிரம் அறிவிப்பு!

விவசாயிகள் நேசிக்கும் வானிலை வழிகாட்டி

Jeba Arul Robinson

அமெரிக்காவில் இருந்து இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி

Ezhilarasan