28.9 C
Chennai
April 28, 2024
முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

IPL 2021 Auction: ஏலத்தில் எடுக்கப்பட்ட முக்கிய வீரர்கள்

ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், 12 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

15வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் தற்போது குஜராத் டைட்டன்ஸ், லக்னோ ஆகிய புதிய அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. 220 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 590 வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றனர். இதில் அதிகப்படியாக இஷான் கிஷன், 15 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். சென்னை அணிக்காக விளையாடிய ரெய்னாவை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்திய வீரர் இஷான் கிஷன், 15 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. இதன் மூலம் 16 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட யுவராஜ் சிங்கிற்கு அடுத்தபடியாக ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இந்திய வீரர் என்ற பெருமையை இஷான் கிஷன் பெற்றார்.

  • ஸ்ரேயாஸை 12 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது.
  • ஹர்ஷல் படேல் 10 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு பெங்களூரு அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
  • ஷிகர் தவானை பஞ்சாப் கிங்ஸ் அணி 8.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
  • இந்திய வீரர் முகமது ஷமியை, 6.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி
  • டெல்லி மற்றும் ராஜஸ்தான் இடையே ஏலம் எடுப்பதில் கடுமையான போட்டி நடந்த நிலையில் அஸ்வினை 5 கோடி ரூபாய்க்கு வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ்.
  • இந்திய வீரர் ராபின் உத்தப்பா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.

  • இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் 8.75 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டார்.
  • இந்திய வீரர் க்ருனால் பாண்டியாவை 8.25 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி வாங்கியுள்ளது.
  • தென்னாப்பிரிக்க வீரர் காகிசோ ரபாடாவை, 9.25 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.
  • டுவைன் பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 4 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.
  • ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 6 புள்ளி 25 கோடி ரூபாய்க்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
  • இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமார் 4.20 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் வாங்கப்பட்டார்.

  • ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ்-ஐ, 7.25 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!
  • இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா 10.75 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலம் எடுத்தது.
  • ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் 6.50 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்
  • இந்திய வீரர் அம்பத்தி ராயுடுவை, 6 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
  • இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ 6.75 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.
  • இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் 5.50 கோடிக்கு வாங்கப்பட்டார்.

  • மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் நிக்கோலஸ் பூரன், 10.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்.
  • தமிழக வீரர் நடராஜன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் 4 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.
  • இந்திய வீரர் தீபக் சாஹர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 14 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.
  • இந்திய வீரர் பிரசித் கிருஷ்ணா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 10 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.
  • நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசனை 10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading