ஜூலை 12-ல் வெளியாகிறது ‘இந்தியன் 2’… மே 22-ல் முதல் பாடல் வெளியீடு!

கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’  திரைப்படம் ஜூலை 12ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.  ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி திரைப்படம் “இந்தியன்”. இந்த திரைப்படத்தின் இரண்டாம்…

கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’  திரைப்படம் ஜூலை 12ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. 

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி திரைப்படம் “இந்தியன்”. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சமுத்திரகனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெய்ண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது.இந்நிலையில் திரைப்படத்தின் புரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் பெங்களூருவில் நேற்று (மே 18) நடைபெற்ற சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியின்போது, ஆரம்ப கட்ட புரமோசன் நிகழ்ச்சியில், உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் கலந்துகொண்டு ‘இந்தியன் 2’ குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டனர்.

 

இந்நிலையில், ‘இந்தியன் 2’  திரைப்படத்தின் முதல் சிங்கிள் வருகின்ற மே 22-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இந்த திரைப்படம் ஜூலை 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.