32.7 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

KH 233 படத்திற்காக தயாராகும் கமல்ஹாசன் : வைரலாகும் வீடியோ..!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்திற்காக அவர் தயாராகிவரும் விதத்தில் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து கடந்த 1996-ம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் இந்தியன். படம் வெளியான அந்த சமயத்திலேயே சூப்பர் ஹிட் ஆனது. இந்த நிலையில், 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.இந்தியன் படத்தின் முதல் பாகத்தினை இயக்குநர் ஷங்கர் இயக்கி இருந்த நிலையில், 2-ம் பாகத்தினையும் அவரே கமல்ஹாசனை வைத்தே ஆரம்பித்தார். படப்பிடிப்பு தொடங்கிய சிறிது நாட்களிலேயே விபத்து உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு பாதியில் நின்றது. பின்னர் கமல் நடித்து வெளிவந்த ‘விக்ரம்’ படத்தின் மிகப்பெரிய வெற்றியைப் தொடர்ந்து ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

லைகா மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், அனிருத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாகவும், அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும், சில மாதங்களாக இப்படத்தில் முக்கிய வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து வருவதாக கூறப்பட்டுவந்தது. ஆனால், இதுகுறித்து நம்பத்தகுந்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் கமல்ஹாசன் ”KH233” படத்திற்காக தயாராகும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ராஜ் கமல் ஃப்லிம்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. கமல் ரசிகர்கள் இந்த வீடியோவை கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading