36 C
Chennai
June 17, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

தாம்பரம் – நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வாரந்திர சிறப்பு ரயில் ஜூன் மாதம் முழுவதும் நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளதாவது,

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

“பயணிகளின் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரயில் (எண்: 06012) ஜூன் 2-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து வாரந்தோறும் திங்கள்கிழமை நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரயில் ( எண்: 06011) ஜூன் 3-ம் தேதி முதல் ஜூலை 1-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

அதேபோல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வாரந்தோறும் புதன்கிழமை கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (எண்: 06043) ஜூன் 5 முதல் ஜூலை 3-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.  மறுமார்க்கமாக கொச்சுவேலியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வாரந்தோறும் வியாழக்கிழமை இயக்கப்படும் வாரந்திர சிறப்பு அதிவிரைவு ரயில் (எண்: 06044) ஜூன் 6 முதல் ஜூலை 4-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading