36 C
Chennai
June 17, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பேருந்துகளின் இருப்பிடத்தை அறிய ‘சென்னை பஸ் செயலி’- அமைச்சர் சிவசங்கர்

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக அனைத்து பேருந்துகளிலும் GPS கருவி பொருத்தப்பட்டு ‘சென்னை பஸ் செயலி’ மூலம் பேருந்துகளின் இருப்பிடத்தினை அறிந்து கொள்ளும் சேவை விரிவு படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் GPS பொருத்தப்பட்டு பேருந்துகளின் பயண நேரம் மற்றும் வருகை போன்றவற்றை சென்னை பஸ் செயலி (Chennai Bus App) மூலம் கைபேசியில் அறிந்து கொள்ள முடிகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனை தொடர்ந்து தற்போது அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக அனைத்து பேருந்துகளிலும் GPS பொருத்தப்பட்டு Chennai Bus App மூலம் இச்சேவை விரிவு படுத்தப்பட உள்ளது. இதன் மூலமாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் வந்து கொண்டிருக்கும் இடம் மற்றும் குறிப்பிட்ட இடத்திற்கு எவ்வளவு நேரத்தில் வந்து சேரும் என்பதை எளிதில் தெரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களது பயணத்தை மேற்கொள்ளலாம் மற்றும் பேருந்து தடம் குறித்த Search Route option-யை Click செய்து குறிப்பிட்ட வழித்தட எண்களில் இயங்கும் அனைத்து பேருந்துகளின் விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். தேவையான தடத்தினை தேர்ந்தெடுத்து Click செய்வதன் மூலம் தற்போது அந்த தடத்தில் வருகின்ற பேருந்துகளின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

பேருந்தின் நிகழ்நிலை இருப்பிட விவரத்தின் பகிர்வு (Live Location sharing) மூலமாக பயணம் செய்யும் பயணிகள் தங்கள் இருப்பிட விவரத்தினை பாதுகாப்பு கருதி தங்களது உறவினர்களுக்கு குறுந்தகவல்(S.M.S) மூலமாக அனுப்பும் வசதி உள்ளது. பயணிகள் தங்களது பயணம் குறித்த கருத்துக்களை (Feed Back) பதிவு செய்து அனுப்பும் வசதியும் உள்ளது. மேலும், இச்செயலி மூலம் தனியாக பயணிக்கும் பெண் பயணிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ள ஏதுவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செயலி மூலம் முன்பதிவு செய்த பயணிகளுக்கு SMS அனுப்பப்படும் Link-யை கிளிக் செய்வதன் மூலம் அவர்களது முன்பதிவு செய்த பேருந்து எந்த இடத்தில் வருகிறது என்ற விபரத்தையும் அறியலாம். மேலும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை மற்றும் பேருந்து நிலையங்களில் பேருந்துகளின் வருகையினை முன் கூட்டியே அறிந்து அதற்கேற்ப புறப்பாட்டினை திட்டமிட இச்செயலி பயன்படும் இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading